சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் அமுதனின் இல்லத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அமுதனின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சம்பத்குமார், மாணவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், துயரத்தில் ஆழ்ந்துள்ள பெற்றோருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார். SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ. 6 லட்சத்திற்கான நிதியுதவி மாணவரின் பெற்றோரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.

“>

 

இந்த நிகழ்வின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி J.E. பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்து குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளையும் ஆறுதல்களையும் உறுதி செய்தனர்.