சர்வதேசக் கால்பந்து அரங்கின் ஜாம்பவானும் அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, போக்குவரத்துக்கு சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது அவரது ரசிகர் ஒருவர் காரின் ஜன்னல் வழியாக திடீரென வீசிய ஜெர்சியில் புன்னகையுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அமெரிக்காவின் இன்டர் மியாமீ அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து சிக்னலுக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் மற்றொரு காரில் வந்த தீவிர ரசிகர் ஒருவர், தனது காரின் ஜன்னல் வழியே அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜெர்சியை மெஸ்ஸியின் காரை நோக்கித் தூக்கி வீசினார்.

பொதுவாகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் இது போன்ற அசாதாரணமான சூழல்களில் கோபமடைவது வழக்கம் என்றாலும், மெஸ்ஸி எவ்வித சலனமும் இன்றி அந்த ஜெர்சியைச் சிரித்த முகத்துடன் கையில் எடுத்து, தனது கையெழுத்தை இட்டு மீண்டும் அந்த ரசிகரிடம் லாவகமாகத் திருப்பிக் கொடுத்தார்.

“>

 

உலகின் ஆகச்சிறந்த கால்பந்து வீரராகக் கொண்டாடப்படும் மெஸ்ஸியின் இந்த எளிய மற்றும் கனிவான அணுகுமுறை, அவர் ஏன் ரசிகர்களால் ‘GOAT’ (Greatest Of All Time) என்று போற்றப்படுகிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கால்பந்து பிரியர்கள் சிலாகிக்கின்றனர்.