தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நேற்று ஆளுங்கட்சியான தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. நீர் வளத்துறையில் மூன்று சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான ந.ஆனந்த் எழுந்து மிகக் கடுமையான வகையில் பதிலடி கொடுத்தார்.
தவெக அரசு மக்கள் நலனுக்காக உழைப்பதாகவும், தாங்கள் யாரிடமிருந்தும் லஞ்சம் பெறவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்த அவர், தனது தலைவர் எப்போதுமே இத்தகைய செயல்களை மன்னிக்க மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறினார். எதிர்க்கட்சிகள் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்குத் துணிச்சலாகச் சவால் விடுத்த அவர், தன்னிடம் உடனடியாக ஆதாரத்தைக் கொண்டு வந்து நிரூபிக்கட்டும், அதன் பிறகு அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
விவாதத்தின் முடிவில் அமைச்சர் ந.ஆனந்த் வெளிப்படுத்திய ஒரு வார்த்தைப் பிரயோகம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதுடன், அவையில் பெரும் கவனத்தையும் ஈர்த்தது.
OMG! Did I really witness this in the Assembly today, or was it a dream?
When an opposition member accused our TVK government of taking bribes in the Water Resources Department, claiming there was a “3% commission,” something unexpected happened.
Our TVK General Secretary and… pic.twitter.com/hSz88DTIt5
— TVK Pulse (@TVKpulse) August 7, 2026
“>
சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் அதிரடியான இந்தப் பதில்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
