திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சில காலம் விலகி, தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் முழு கவனமும் செலுத்தி வரும் பிரபல டொலிவுட் நடிகை ஷாம்னா காசிம் எனப்படும் பூர்ணா, தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையவாதிகளின் இதயங்களைத் தொட்டுள்ளது.

தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர், இந்த முறை தனது தந்தையின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து எழுதியுள்ள உணர்ச்சிப்பூர்வமான வரிகள் பலரைக் கண் கலங்கச் செய்துள்ளன.

தனது தந்தை இந்த உலகை விட்டுப் பிரிந்து ஒன்பது ஆண்டுகள் ஆன போதிலும், அவருடனான நினைவுகளும் அவர் மீதான அன்பும் குடும்பத்தில் உள்ள அனைவரின் இதயங்களிலும் இன்னும் பசுமையாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் நேரில் பார்த்திராத தனது தந்தையின் சாயலையும் அன்பையும் தற்போது தன் இரண்டாவது குழந்தையின் கண்களில் பார்ப்பதாகவும், அந்தப் பிஞ்சு குழந்தை தங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு அழகான பரிசு என்றும் அவர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பூர்ணாவிற்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் மகாலட்சுமி என்ற பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையை இழந்த துயரம் தன் தாய்க்கு நேற்றைய தினம் நடந்தது போல் இன்னும் இருப்பதாகவும், காலம் எவ்வளவோ கடந்தாலும் அவர் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.