தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கும், கடந்த கால உண்மையான நிகழ்வுகளுக்கும் இடையே பெரிய முரண்பாடு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய அரசு பதவியேற்று சில மாதங்களே ஆன நிலையில், ஐம்பது ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் செய்யாத சாதனையை இந்த அரசு செய்துவிட்டதாகக் கூறப்படும் வாதங்கள் தவறானவை என்றும், உண்மைகள் எப்போதோ பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதியன்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிரான ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்றதுடன், தொடர்ந்து எம்பிக்கள் குழு மற்றும் கேரளா, தெலுங்கானா, பஞ்ச், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்த முக்கியமான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைவர் விஜய் நேரில் வராமல், தனது பொதுச்செயலாளர் மற்றும் ஐந்து பக்க அறிக்கையை மட்டும் அனுப்பி வைத்துப் பங்கேற்றார். ஆனால், தற்போது மற்றொரு தரப்பு இதனைப் புதிதாகச் செய்து முடித்த சாதனையைப் போலச் சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது.
அண்மையில் நடைபெற்ற கூட்டம் என்பது ஒட்டுமொத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல; மாறாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டமே ஆகும். இதில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிகளவிலான உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் எம்பிக்களே பெரும்பான்மையாகப் பங்கேற்றுள்ளனர்.
Understand the genius of what CM Joseph Vijay just did.
If DMK attends – they sit in CM Vijay’s hall, on his terms, endorsing his leadership on the biggest Tamil rights issue of the decade. A 3-month-old government just did what 50 years of Dravidian politics never did – bring… pic.twitter.com/ZQ3Fq55hK2
— George (@georgeviews) August 6, 2026
“>
எந்தவொரு தரப்பும் எதிர்த்தாலும், பங்கேற்றாலும் தங்களுக்குச் சாதகமாகவே முடிவுகளைத் திணிக்கும் போக்கு ஆபத்தானது என்றும், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி உரிமைகள் தொடர்பான இந்தப் பிரச்சினையை எவ்விதத் திரிபுகளும் இன்றி அணுக வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
