மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மல்ஷேஜ் காட் பகுதியில் அமைந்துள்ள காளு அருவிக்கு அருகில் சுற்றுலாப் பயணி ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் கால் தவறி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தாக்கின் ஆழமான பகுதிக்கு அவர் நழுவிச் சென்ற நிலையில், கடைசி நொடியில் ஒரு பாறையில் கை சிக்கியதால் அருவியின் வலுவான நீரோட்டத்திற்குள் நேரடியாகச் செல்வது தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தைக் கண்ட அங்குள்ள மக்களும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் சற்றும் தாமதிக்காமல் தங்களின் ஆடைகளையும் புடவைகளையும் ஒன்றிணைத்துக் கயிறு போல் உருவாக்கினர். உடனடியாக ஆபத்தான பகுதிக்குச் சென்று தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி அந்த இளைஞரை மீட்டுப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

சிறு விழிப்புணர்வின்மை ஒரு மனிதனின் வாழ்க்கையின் இறுதித் கணமாக மாறினால் அவரது குடும்பத்தினரின் நிலை எவ்வளவு துயரமாகியிருக்கும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

“>

 

மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதால், வெறும் செல்ஃபி போட்டோக்களுக்காக யாரும் தங்களின் உயிரைப் பணையம் வைக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.