SIMA 2023 க்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ குறித்து சில அப்டேட்-க்களை தெரிவித்துள்ளார்.

கோலிவுட் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான லியோ வெளியாக  இன்னும் சரியாக 32 நாட்களே உள்ளன. இந்நிலையில் படத்திற்கான அப்டேட்கள் ஏதும் வராததாலும், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை என்பதாலும்  விரக்தி அடைந்த ரசிகர்கள் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களை டேக் செய்து பூட்டி வச்சு பூஜை பண்ணு என்ற ஹாஷ்டேக்  உடன் லியோவுக்கான அடுத்த அப்டேட்களை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் SIMA  2023 விருதுக்கான நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோவுக்கான சில அப்டேட்களை வழங்கியுள்ளார். அதில், லியோ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், வருகிற ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை முதல் படத்திற்கான அப்டேட்கள், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடர்பான விவரங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும்,

லியோ படத்தில் தளபதி விஜய் அவர்களின் கதாபாத்திரம் தான் படத்திற்கான ஆன்மாவாக இருக்கும், தளபதி விஜய் அவர்கள் இன்னும் ஒரு சில தினங்களில் படத்தை பார்த்து விடுவார், வரக்கூடிய அடுத்த 30 நாட்களுக்கான  காத்திருப்பு உண்மையில் மதிப்பு மிக்கதாக  இருக்கும் என தெரிவித்துள்ளார். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.