சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனையாகிறது.

சிஎஸ்கே தற்போது 2024 ஐபிஎல்லில் 3  ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது., இரண்டு வெற்றிகளும் அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனையடுத்து சென்னை அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது.

அதன்பிறகு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டி வரும் 8ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனையாகிறது. அதன்படி ஏப்ரல் 5ம் தேதி காலை 9:30 முதல் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சிஎஸ்கே நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.