தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மாறியுள்ள சூழலில், தலித் மக்களின் நலனுக்காகவும் சமூக நீதி காக்கவும் புதிய அரசு எடுத்து வரும் சில முக்கிய முன்னெடுப்புகள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
குறிப்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் போன்றவர்கள் தலித் விவகாரங்களில் அமைச்சர்கள் மீது மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் சில முக்கிய உண்மைகள் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி:
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முந்தைய அரசு சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத் தடை நீங்கி சிபிஐ விசாரணைக்கு புதிய அரசு வழிவகை செய்துள்ளது.
அதேபோல், திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கவின் செல்வநி என்ற தலித் ஐ.டி ஊழியரின் ஆணவக்கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளருமான எஸ்.கிருஷ்ணகுமாரி, புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே சிபி-சிஐடி காவல்துறை மூலம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய ஆட்சியில் தப்பிக்க வைக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது கூண்டோடு சிக்கியுள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சமூக நீதி மற்றும் நில உரிமைப் பணிகள்:
தீண்டாமை ஒழிப்பு: பல ஆண்டுகளாகப் பேருந்து வசதி மறுக்கப்பட்ட குக்கிராமங்களுக்குப் பேருந்து சேவைகள் வழங்குதல் மற்றும் தலித், பழங்குடியின மக்களுக்கெனத் தனி இடுகாடுகளைப் பாதுகாப்பாக உருவாக்குதல் போன்ற எதிரான முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நில உரிமை: நிலமற்ற தலித் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வி மேம்பாடு: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1. K. Armstrong, the BSP Tamil Nadu state president and a prominent Dalit leader, was assassinated in July 2024.
While the Madras High Court ordered a CBI probe in late 2024, the previous state administration opposed the transfer, leading to a Supreme Court stay in November…— MacroMatrix (@MacroMatrix1) July 23, 2026
“>
கல்வித்துறை அமைச்சராக இருக்கும் இராஜமோகன் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டும் குரல் கொடுக்காமல், அனைத்து சாதியினருக்குமான பொதுவான குரலாக ஒலிக்கிறார் என்றும், இருப்பினும் தலித் மக்களுக்கான பல நல்விளைவுகளை அரசு மௌனமாகச் செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் எக்ஸ் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
