சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13230 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14433 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
