ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் ஏப்ரல் 5ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.