அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, MGR உடல் நலம் சரி இல்லாமல் இருந்த போது எல்லாருமே பள்ளிவாசல்… இந்து கோவிலில்… சர்ஜ்  எல்லாத்திலும் வழிபட்டுவோம். சத்யா தாய் பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக பாவித்தது தமிழ்நாடு.  அப்படிப்பட்ட இன்னொரு தலைவன். ஆறுமுகம் கொண்ட ஒரு முகத்தினுடைய பழனிச்சாமி. தலைவர் சொன்னார்…

திமுகவை என்ற தீய சக்தியை ஒழிக்கும் வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது, ஒழியாதுன்னு சொன்னாரு. அந்த வார்த்தைக்கு  உயிர் கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா. தலைவரை கேலி பேசினார் கலைஞர்… எவ்வளவோ பேசிப் பார்த்தார்….. எவ்வளவோ நாடகம் ஆடினார்.கடல்ல போட்டா  கட்டு மரம் ஆவேன் என சொன்னாரு.

கடலில்  போட்டா யாராச்சு கட்டுமரம் ஆக முடியுமா ? இப்படி எல்லாம் ஏமாத்துறாங்க. நீங்க பயணிக்க தோணியாக  மாறுவேன் என சொன்னாரு. எங்க அவரை தூக்கி போட்டு காட்டுங்க… தூக்கி போட மாட்டாங்க என நினைத்து பேசினாரு. இந்த பில்டப் எல்லாம் மக்கள் கிட்ட… தமிழகத்தில் ஈடுபடல.

தலைவர் வெளிநாட்டில் இருக்கும் போது பாத்தீங்கன்னா… என்னுடைய ஆருயிர் சகோதரர், புரட்சித்தலைவரை கருணாநிதி சொல்றாரு.  எம் ஜி ஆர் அவர்களும்,  நானும் அண்ணன் தம்பியாக ஒரு தட்டில் சாப்பிட்டோம். பாழாய் போன அரசியல் எங்களை பிரிச்சிடுச்சி. அவர் வளர்த்த திமுக கட்சியை நீ தான் குடும்ப சொத்தாக  மாற்றிட்டாய். கருணாநிதி  மக்கள் கிட்ட எனக்கு ஓட்டு போடுங்க என சொல்லுறாரு. 1984 தேர்தல்ல என்னை முதலமைசராக்குங்கள்… நான்  எம்ஜிஆர் கிட்ட முதலமைச்சர் பொறுப்பை கொடுக்கின்றேன் என சொல்லி பார்த்தாரு என பேசினார்.