செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  2013ல புழல் சிறையில் இருந்த நபர் ஜாபர் சாதிக். அதே மாதிரி 2019இல் 38 கிலோ மலேசியாவுக்கு கேட்டமின் கடத்துனதுக்காக சென்னையிலும்,  மும்பையிலும் ஜெயிலில் இருந்தவர். இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாதா ? சரி ஏதோ… அவங்க கட்சியில் இருக்கிறவங்கன்னு சோசியல் மீடியால அவர புகழ்ந்து ஸ்டாலினும்,  உதயநிதியும் பதிவு போட்டால் இட்ஸ் ஆல் ரைட். உங்க வீட்டு பெண்கள் போட்டு இருக்காங்களா ? இல்லையா ? இன்னைக்கு நேஷனல் என்சிபி என்ன சொல்லி இருக்கு ?

மங்கை என்கிற படம் முழுமையாக பினான்ஸ் பண்றது ஜாபர் ஜாதிக்…  இந்த ஜாபர் ஜாதிக்-கும், ஜாபர் சேட்டு தான் முழுமையாக  திமுகவின் பிண பெட்டியில் அடிக்கப்படுகின்ற கடைசி ஆணி என வச்சுக்கோங்க. அவர் போலீசுக்கு உள்ள இருந்தே கிரிமினல் வேலை பார்த்தவர். அவரோட 4 வீடியோ பாரதி ஜனதா கட்சி மாநில தலைவர் ரிலீஸ் பண்ணி இருக்காரு.

ஒரு போலீஸ் ஆபீசர்….  நீ கிரிமினல் ஓட சேர்ந்துக்கிட்டு,  அவங்களோட பேசி…  2 ஜி கேஸ்ல எப்ப எப்படி அதை சரி பண்ணனும்ன்னு  பேசுவாரா ? அவரை ஏன் கைது பண்ணலன்னு எனக்கு இன்னும் தெரியல. அதே மாதிரி தான் இந்த ஜாபர் ஜாதிக்  மங்கை படத்துக்கு முழுசா ஃபைனான்ஸ் பண்ணதா என்சிபி யினுடைய அதிகாரி சொல்லி இருக்காரு. அப்போ திராவிட முன்னேற்ற கழகம் தலையீடா ?  இல்லையா ? என கேள்வி எழுப்பினார்.