செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சத்தீவுக்கும், எங்களுக்கு சம்பந்தமில்லை என்று யாரோ ஒரு பெரிய மூத்த தலைவர் கமெண்ட் பண்ணி இருக்காரு. சம்மந்தம் இல்லைன்னு சொன்னீங்கன்னா… 1974இல் ஏன் அவ்வளவு சர்ச்சை ஆச்சு ? அந்த ஏரியாவில் இருக்கிற மீனவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு.  மீனவர்களுடைய குடும்பங்களும் அந்த தொழுகைக்காக அந்தோனியார்  சர்ச்சுக்கு போறவுங்களும் போயிகிட்டு தான் இருக்காங்க.

அது நம்மளுடைய எக்கனாமிக்ஸ் ஸோன்ல வருது. இத்தனையும் இருக்கும்போது இன்னைக்கு அத பத்தி நீங்க பேசாதீங்கன்னு  சொல்றதற்கான தைரியத்தோடு முன் வரவங்களை கேக்குறன், அந்த ரெண்டு பேரும் அப்பவும் கூட்டணி,  இப்பவும் கூட்டணி…  அப்போ ஒரு விஷயம் பண்ணிட்டீங்க இப்ப அதை பத்தி கேட்டா,  உங்களுக்கு கஷ்டமா இருக்கு.

அப்ப ஒரு விதத்துல பண்ணுனதை மறுத்துவிட்டு,  இப்ப வரைக்கும் நீங்க என்னென்னமோ சொல்லிட்டு இருக்கீங்க. கச்சத்தீவை பற்றி எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, நாங்க ஒன்னும் பண்ணல, நீங்க மீட்டு கொடுங்க, பொய் பிரச்சாரம்…  நான் அதனாலதான் நான் மரியாதையா உண்மைக்கு புறம்பான… உண்மைக்கு புறம்பான என சொல்லுறேன்,  என்னை மன்னிச்சிடுங்க..  பொய் பிரச்சாரம் அது என தெரிவித்தார்.