தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) செயல்பாடுகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் சென்னை மேயர் பிரியா. குறிப்பாகத் தவெக-வின் அரசியல் நகர்வுகள் மற்றும் அதன் தலைமையை மேயர் பிரியா வெளிப்படையாகவே சாடி வருகிறார். இத்தகைய அரசியல் சூழலில், சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தவெக-வின் முக்கிய முகமான அமைச்சர் ராஜ்மோகனும், மேயர் பிரியாவும் ஒரே மேடையில் இணைந்து நின்றது அரசியல் அரங்கில் பெரும் வியப்பை கிளப்பியுள்ளது.

​ஒரே மேடையில் இருவரும் இணைந்து பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய காட்சி, “அரசியல் நாகரீகமா அல்லது அடுத்தக்கட்ட அரசியல் வியூகமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேயர் பிரியாவின் இந்த செயல், “சொல்லொன்றும் செயலொன்றும்” என்ற விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளதுடன், சென்னை அரசியலில் புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளது.