எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காட்சி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், மதுவின் போதையில் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். அந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு மிக ஆக்ரோஷமாக நடனமாடுகிறார். போதையின் உச்சத்தில் இருந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் தனது நெஞ்சிலேயே எதிர்பாராத விதமாகக் குத்திக்கொள்கிறார்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தன்னைத்தானே குத்திக்கொண்டது கூட அந்த இளைஞருக்குத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு இளைஞர் அவரது நெஞ்சில் ரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சுட்டிக்காட்டுகிறார். அப்போதுதான் தான் குத்திக்கொண்டதே அந்த இளைஞருக்குத் தெரிய வருகிறது. காண
போதை மனிதனின் விவேகத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இத்தகைய செயல்கள் உயிர் ஆபத்தில் முடியக்கூடும் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
