பாலியல் புகார் அளிப்பதாக மிரட்டி, அதற்குப் பதிலாகப் பெரும் தொகையைப் பேரம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம், தற்போதுள்ள கடுமையான சட்டங்கள் சிலரால் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒரு பொய்யான புகார், ஒரு மனிதனின் நற்பெயரைச் சீரழிப்பது மட்டுமன்றி, ஒட்டுமொத்த குடும்பத்தையுமே நிலைகுலைய வைக்கிறது.
சட்டம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காகவே அன்றி, பணம் பறிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல. கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின், திடீரென அந்தப் புகார் ஏன் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
Allegation First, Evidence Later? When Criminal Complaints Become Negotiation Tools
In the viral video, a woman allegedly seen discussing a settlement after filing a molestation case has reignited concerns about the misuse of criminal laws.
A man gets accused, his reputation is… pic.twitter.com/SnaKJwnvAz
— ShoneeKapoor (@ShoneeKapoor) June 10, 2026
இத்தகைய போலியான வழக்குகளால், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுவதுடன், சட்டம் மீதான நம்பிக்கையும் குறைகிறது. சட்டத்தை மிரட்டலுக்கும், லாபத்திற்கும் பயன்படுத்தும் இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
