இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடாததற்கு காரணம் என்ன என்று தமிழக முதலமைச்சர் கேட்டுள்ளார். தேர்தல் நிதி பத்திரம் மூலமாக அதிகமாக பணம் பெற்ற பாஜக,  உங்களை கைவிட்டு விட்டு தமிழிசை சௌந்தரராஜன் பலிகிடாவாக ஆக்கிவிட்டதாக விமர்சனம் செய்து உள்ளார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

அவங்க அதை எப்படி வேணா பாக்கட்டும்.  எங்க கட்சி எப்படி தீர்மானிக்குதோ,  அப்படித்தான் நான் நடப்பேன். எங்க கட்சியின் கண்டஸ்ட்டு பண்ண கூப்பிட்டா போவேன், இல்லனா இல்ல.  தேர்தல் பத்திரங்கள் மூலமாக தான் பணம் வருது,  அத வச்சுட்டு உங்களை கைவிட்டுட்டாங்க…  உங்கள போட்டிபோடாம வைக்கிறாங்களே என சொல்லுறாங்களே… நன் கேட்குறேன்..

திமுகவுக்கு தேர்தல் பாத்திரம் மூலம் பணம் வரலையா ? 90% மொத்தமா அவங்களுக்கு தேர்தலுக்கு பணம் வருதுன்னா…. கட்சிக்கு பணம் வருதுன்னா…. ₹100 வருதுன்னா,  90 ஒரே ஆள் கிட்ட இருந்து வந்திருக்கு. ஏன் வந்துச்சுங்க ? அவங்களுக்கு என்ன கொடுக்கல், வாங்கல் பண்ணி இருக்கீங்க. நான்  அதையும் கேட்கிறேன். எங்க கட்சி தீர்மானம் எடுக்கும்…  யாரை போட்டி போட வைக்கணும் ? யாரை போட்டி போட வைக்க வேணான்னு ?

இந்த முறையா ? அடுத்த முறையா ? போன முறையா ? அதெல்லாம் கட்சி முடிவு எடுப்போம். அது கட்சி தீர்மானிக்கும். அதுல முதலமைச்சர் இவ்வளவு  தீவிரமா இன்ட்ரெஸ்ட் எடுத்து பாப்பாருன்னு நான் நினைக்கல. ஏன்னா அவங்க கட்சிக்கு நிறைய விஷயம் இருக்கு இங்க… சில பேருக்கு  கொடுக்குறாங்க…. சில பேருக்கு கொடுக்கல…. கொடுத்தவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க…. எப்படி பண்றாங்கன்னு தெரியல ? இதெல்லாம் இருக்கு. அதனால அவரு அதை கொஞ்சம் கவனிச்சுக்கணுமே தவிர,  எனக்கு கேட்கணும்னு தேவையே இல்லை. அது ஒவ்வொரு கட்சிக்கும் அவங்க அவங்க விவகாரம் என தெரிவித்தார்.