தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக இங்கு 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். அதோடு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மேலும் இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் மே 1-ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.