செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜகவில் முக்கியமான தலைவரோ,  முக்கியமில்லாத தலைவரோ என்ற பாகுபாடு இல்லை. எல்லாரும் கட்சித் தொண்டர்கள் தான், நானும் கட்சியில் ஒரு தொண்டன் தான்.  என்னுடைய கட்சி எப்போது தீர்மானிக்குமோ அப்போது தான் நான் போட்டிக்கு வருவேன்,   அதுதான் விஷயம்.

பணம் இருக்கிறவங்களுக்கும் போட்டியிட வாய்ப்பு இருக்கு. பணம் இல்லாதவங்களுக்கு எல்லாருக்கும் போட்டியிட வாய்ப்பு இருக்கு. இதுல அந்த மாதிரி பாகுபாடு இல்ல.எங்களுடைய சின்னத்தில் 23 வேட்பாளர்கள் போட்டு இருக்கோம். தோழமை கட்சி எல்லாம் இருக்கு, தேர்தலில் போட்டி போடாமலா இருக்கின்றோம்.

இதுக்கு முன்னாடி பொன்னார் ஐயா ஜெயிக்கலையா ? சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள்  ஜெயிக்கலையா ? பயமோ,  கூச்சமோ…. கேள்வி கேப்பாங்களே என்ற ஒரு தயக்கமோ  இல்லாமல்….  நடுக்கமும் இல்லாம…. இது எங்க ப்ரோக்ராம்னு போர்ட் போட்ட மாதிரி போட்டீங்கன்னா,  வருவோம் நாங்களும் வந்து கேட்க தான் செய்வோம். பெயிலா ? சக்சஸா ? இல்ல.. அந்த மக்களுக்கு போய் சேறுதான்னு  பார்க்கிறது தான் எங்களுடைய முதல் கடமை என தெரிவித்தார்.