நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் மே ஐந்தாம் தேதி வரை மங்காத்தா திரைப்படத்தை சன் எக்ஸ் டி ஓடிடி தளத்தில் இலவசமாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அஜித் நடித்த தீனா மற்றும் பில்லா ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் அஜித்துக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.