மாலை நேரத் தின்பண்டங்களுக்கு மிகவும் ஏற்ற, மொறுமொறுப்பான மற்றும் சுவையான ரிப்பன் பக்கடா வீடே மணக்கும் வகையில் எளிதாகச் செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1 கிலோ
பொட்டுக்கடலை – ¼ கிலோ
வரமிளகாய் – 10
பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் எடுத்து வைத்துள்ள புழுங்கல் அரிசியை நன்முறையில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டுத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதன்பின்னர், ஊறவைத்த அரிசியுடன் பொட்டுக்கடலை மாவு, வரமிளகாய், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றுசேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவினை ரிப்பன் பக்கடா அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கடா தயார். இந்தத் தின்பண்டம் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் புதியது போல இருக்கும்.
