திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதி (38) என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடித் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவருக்கு ஏற்கனவேத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி அவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நசிபா கடந்த மூன்று மாதங்களாகக் கள்ளக்காதலன் மதியிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதி, “நீ என்னுடன் பேசவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்” என்று கத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர் நசிபாவைக் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதி, “நாம் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டச் சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த நசிபா கந்திலி காவல் நிலையத்தில்ப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் மதி மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
