செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  1974 லேயே ஃபாரின் செக்ரட்டரி  முதலமைச்சருக்கு விளக்கமாக எடுத்து சொல்லி இருக்கிறார். இப்படி ஆக போகுதுன்னு…  அதுக்கு ஒன்னும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கலையே…. இப்படியாக தமிழர்களுக்கு விரோதியாக,  நிறைய விஷயம் காங்கிரஸ் கட்சி பண்ணும்போது,  தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் பண்ணும் போது…  ஜல்லிக்கட்டு விவகாரம்  என்னங்க ?  அப்பவும் நீங்கதான் இருந்தீங்க தோழமைக் கட்சியா?

ஜல்லிக்கட்டு ஒரு மிருகத்துக்கு கொடுக்கக்கூடிய அநியாயம். அது அனிமல் ரைட்ஸ்க்கு அகைன்ஸ்டுன்னு சொல்லிட்டு, அனிமல் ரைஸ் போர்ட்  மூலமாக எடுத்து போட்டாங்க வெளியில…  …. அப்ப இருந்த தோழமைக் கட்சி டிஎம்கே ஒன்னுமே சொல்லல..

இப்படியாக காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு எதிராக பண்ணிக்கிட்டு இருந்தபோது அப்ப தோழமையா இருந்த கருணாநிதியும்,  டிஎம்கேயும் ஒரு போராட்டமும்  பண்ணல…  ஆனால் 2014ல் இருந்து அதே கேள்விகளை மோதி ஐயா மீது வைத்து, 21 லெட்டர் பிரதமருக்கு எழுதி இருக்காங்க… கச்சத்தீவு… கச்சத்தீவு….  என்னங்க கச்சத்தீவு 50 வருஷமா சொல்ற பொய்யை முதலில் சரி பண்ணுங்க என தெரிவித்தார்.