செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க கழகத்திற்கு கட்சிக்கு… இயக்கத்திற்கு அஸ்திவாரம்…. பவுண்டேஷன்… கடைகால் என்று சொல்லக்கூடிய அது ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அது ஸ்ட்ராங்காக இருந்தால்தான்,  ஒரு இயக்கம்  எலெக்ஷன் சந்திக்க முடியும். இன்றைக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கட்சியில் இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா சொன்னது போல்,  கொட்டி வைத்த செங்கலாக இருக்கக்கூடாது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,   முழு சக்தியை…  இரண்டு கோடி பேரை நாம்  பயன்படுத்தினால் திமுக Out. எது எப்படி இருந்தாலும் சரி,  நீதிமன்றம் ஒன்று இருக்கிறது.

நீதிமன்றத்தில் நிச்சயமாக  இதை சந்தித்து,  கண்டிப்பாக நிரபராதி என்று நாங்கள் நிலைநாட்டுவோம். அதுதான் நாங்கள் சொல்ல வருகிறோம்.  கும்பல் அதிகமாக இருப்பதினால்,  உடனே அவர்கள் வலுவாக இருக்கிறார்கள்  என்று சொல்ல முடியாது. மக்கள்தான் இறுதி எஜமானர்கள். மக்கள் திரண்டு எழும்பொழுது… ஆளை பார்த்து ஓட்டு போட போறதில்லை.

ஆளும் கட்சி என்ன செஞ்சி இருக்கு ? எதிர்கட்சி செயல்பாடு  எப்படி இருக்கு ?  மக்களுக்கு பிரச்சினைகளை எப்படி முன்னெடுத்து குரல் கொடுக்கிறார்கள். அதுதான் நிச்சயமாக பார்ப்பார்கள். அந்த வகையில் கண்டிப்பாக…  ஒரு ஆட்சியினுடைய எதிர்ப்பு அலை நிச்சயமாக எங்களுக்கு ஆதரவு அலையாக மாறும். எங்களுடைய ஸ்கீம்ஸ் எல்லாம் மக்களை போய் சேர்ந்து இருக்கின்றது.

அது எங்களுக்கு ஆதரவு கொடுக்கும். அதனால் அவர்கள் 50 பேர் இருந்தாலும்,  100 பேர் இருந்தாலும்,  எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை சரி…  இன்றைக்கு சொல்லாத துயரத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் பொழுது எங்களை  ஆதரிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.