சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒன்றில், தவெக தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியினரிடையே நிகழ்ந்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில், சட்டப்பேரவையில் “எங்க, அப்பாவைக் காணோம்?” என்று விஜய் எழுப்பிய கேள்வி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. இந்த விவகாரம் அடங்குவதற்குள், அடுத்த கட்டமாக பாஜக தரப்பிலிருந்து வந்த ஒரு கருத்து நிலைமையை மேலும் விபரீதமாக்கியுள்ளது.
இன்று சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை விவாதங்களைச் சுட்டிக்காட்டி பேசுகையில் சற்று கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
அவர் பேசுகையில், “சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?” என்று குறிப்பிட்டிருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட குடும்பப் பின்னணியைக் குத்துவது போல அமைந்திருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்களின் மோதல் என்பது கொள்கை ரீதியாகவும், ஆளுமை ரீதியாகவும் இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வகையில் தற்போது அண்ணாமலையும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்.
ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
