விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று பேரும் தவறி விழுந்து படுதாயம் அடைந்தனர்.

இதில் மாரிகனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த சாமிராஜா மற்றும் முத்துமாணிக்கம் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.