அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சாலி’ என்ற மனித உருவ ரோபோ, வரும் செப்டம்பர் மாதம் முதல் உதவி ஆசிரியராகப் பணியில் சேரவுள்ளது.
சுமார் 57,590 டாலர் மதிப்பிலான இந்த அதிநவீன ரோபோ, மாணவர்களின் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கும், கற்றல் பணிகளில் கூடுதல் உதவியாக இருப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவானது ஆசிரியர்களுக்குப் போட்டியாகவோ அல்லது அவர்களுக்கு மாற்றாகவோ செயல்படாது என்றும், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து அவர்களுக்கு உறுதுணையாக மட்டுமே இருக்கும் என்றும் பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்காலக் கல்வி முறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
