பாரீஸின் அடையாளமாக விளங்கும் ஈபிள் டவரைக் காணும் ஒவ்வொருவரின் கனவும், அங்கு நிலவும் கசப்பான உண்மைகளால் தகர்க்கப்படுவதாக இந்தியப் பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஸ்டோரிடெல்லர் மெஹர்மா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஈபிள் டவரை அடையச் செல்லும் பாதைகள் தூசியும் மண்ணுமாக இருப்பதாகவும், அங்குக் குப்பைத் தொட்டிகள் குறைவாக இருப்பதாலும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meharma (@storyteller_meharma)

குழந்தைகளுடன் வருபவர்கள், தள்ளுவண்டியை எடுத்துச் செல்ல முடியாமல் பெரும் சிரமப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உலகப்புகழ் பெற்ற அந்த இடத்தில் பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருப்பது தனக்கு வியப்பளித்ததாகக் கூறிய அவர், டவரில் உள்ள லிஃப்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிலந்தி வலைகள் நிறைந்திருப்பதையும், மூச்சுத் திணற வைக்கும் கூட்டத்தையும் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாரீஸின் சொகுசு வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் அழுக்கு, கிராஃபிட்டி ஓவியங்கள் மற்றும் வறுமையின் அவலத்தை அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பாரீஸைப் பற்றிய மாய பிம்பத்தை உடைத்துவிட்டதாகப் பல பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.