ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண், வேலை தேடி ஓமனின் மஸ்கட் நகருக்குச் சென்ற நிலையில், அங்கு கொத்தடிமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் ஏஜென்ட் ஒருவரின் வாக்குறுதியை நம்பி வீட்டு வேலைக்காக மஸ்கட் சென்ற அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் வழங்கப்படாமலும், நாளொன்றுக்கு 15 மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வின்றி வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Urgent Appeal to Hon’ble Dr. @DrSJaishankar, Minister for External Affairs, Govt. of India
Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… pic.twitter.com/UNrKXbv3QS
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 17, 2026
மேலும், முறையான உணவு வழங்கப்படாமல் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், தனது பாஸ்போர்ட்டை ஏஜென்ட்கள் பறித்துக்கொண்டுவிட்டதாகவும் அவர் கண்ணீருடன் உதவி கோரியுள்ளார்.
இந்த அவலநிலை குறித்து அறிந்த மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் அமைப்பின் அம்ஜத் உல்லா கான், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மூலமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இப்பிரச்சனையைக் கொண்டு சென்றுள்ளார்.
மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அப்பாவிப் பெண்கள், இத்தகைய மோசடி ஏஜென்ட்களிடம் சிக்கித் தவிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
