உலக அளவில் முக்கியமான பெருநகரங்களில் சொத்து வாங்குவதற்கு மிகக் குறைந்த விலையுள்ள நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது என்று ‘டாய்ச் பேங்க்’ தனது ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீடுகளின் விலை மலிவாக இருந்தாலும், மக்களின் சராசரி மாத வருமானத்தைப் பொறுத்தவரை ஆய்வு செய்யப்பட்ட 69 நகரங்களில், டெல்லி 66-வது இடத்தைப் பிடித்துப் பின்தங்கியுள்ளது.
இதன் மூலம் டெல்லியில் சொத்து விலை குறைவாக இருந்தாலும், அங்கு வசிக்கும் மக்களின் வருமானம் மிகக் குறைவாக இருப்பதால், அவர்களால் சொந்த வீட்டை வாங்குவது என்பது இன்றும் எட்டாக்கனியாகவே இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெருநகரங்களில் வீடு வாங்குவது எளிது என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், பொருளாதார நிலையில் டெல்லிவாசிகளுக்குச் சொந்த வீடு கனவு என்பது சவாலான ஒன்றாகவே நீடிக்கிறது.
