சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.