புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரேவதி எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.