சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த அருள்முருகனும் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.