தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம் இதை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் கூட,  நம்முடைய மண்ணையும் –  மக்களையும் மதிக்க கூடிய ஒரு மக்கள் பிரதிநிதியை நாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

2024இல் அற்புதமான ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. பாரத நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சியிலே அமரப் போகின்றார். நமக்கு தெரியும்…  திமுககாரனுக்கு இன்னும் தெரியல… நமக்கு தெரியும்.. அது 303, 310 எம்பியில் வரப்போறதில்ல. 400  தாண்டி  உட்கார போகிறார்… 400 எம்பிக்களை தாண்டி…..  ஒரு எம்பி குறையாமல் உட்கார போகிறார்.

தமிழகத்திலிருந்து நாம் கேட்கின்ற ஒரே ஒரு கேள்வி… அந்த 400 எம்.பியில் தமிழ்நாடு மக்கள் எத்தனை எம்பி கொடுக்கப் போகிறார்கள் ? என்பது தான் நம்முடைய கேள்வி….. அதனால் பெரியோர்களே…. தாய்மார்களே… இளைஞர்களே… சகோதர –  சகோதரிகளே…ஒரு வரலாற்றுப் பிழையை சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பு, தமிழ் இனத்திற்கு 2024இல் கிடைத்திருக்கிறது….   1967 இல் செய்த வரலாற்று பிழையை,  2024இல் திருத்துவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு…  நம்முடைய சமுதாயத்திற்கும்,  நம்முடைய தலைமுறைக்கும் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.