உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களைக் கண்டறிவதாகக் கூறி போலீசார் நடத்திய விசித்திரமான சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ஒருவரின் முதுகில் தனது செல்போனை வைத்து சூப்பர் மார்க்கெட் ஸ்கேனர் போல தேய்த்த போலீஸ்காரர், “இந்த இயந்திரம் நீ எந்த ஊர்க்காரன் என்பதைக் காட்டிவிடும்” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசாரின் இந்தச் செயல் மக்களை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாங்கள் 1986 முதல் அங்கேயே வசிப்பதாகவும், தங்களின் பூர்வீகம் பீகார் மாநிலம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட அனைத்து முறையான ஆவணங்களை வைத்திருந்தும், போலீசார் தங்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு நடந்துகொண்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Wow @Uppolice 👏🏻👏🏻
UP Cop ‘Scans’ Man With Mobile Phone, Calls Him Bangladeshi.
TECHNOLOGIA 🤣🤣🤣
— Mahua Moitra Fans (@MahuaMoitraFans) January 2, 2026
“>
ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரோ, உண்மையை வரவழைக்கவே தான் அவ்வாறு செய்ததாகத் தனது செயலுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
