உத்தர பிரதேச மாநிலம் ஹுகுல்கஞ்ச் பகுதி கவுன்சிலர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவாவின் மகன், நேற்று சவுக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தடுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கவுன்சிலர் மகன் எதிர்பாராத விதமாக சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்களின் முன்னிலையிலேயே பளார் என அறைந்தார்.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ஒன்று கூடி கவுன்சிலர் மகனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நிலைமை மோசமானதை அடுத்து, போலீசார் தலையிட்டு அவரை மக்களிடம் இருந்து மீட்டனர்.
அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதற்காக, கவுன்சிலர் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
