கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சிளம் குழந்தை சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகவும், மாநிலத்தில் அரசு என்று ஒன்று உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பெண்கள் அனைவரும் தங்களையும் தங்களது குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், ‘பொறுப்பு’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் இந்த ஆட்சியில், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தற்போதைய அரசை மிகக் காரசாரமாக விமரிசித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும்…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 15, 2026
“>
