திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது  கேட் மூடாமல் இருந்தது ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுக்கு தெரிய வந்தது.

உடனே அவர் ரயிலை நிறுத்திவிட்டு தானே இறங்கி சென்று ரயில்வே கேட்டை மூடினார். அதன் பின் பைலட் ரயிலை இயக்கி சென்றார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டில் பணியிலிருந்த கேட் கீப்பர் ராமுவின் மீது லோகோ பைலட் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி கேட் கீப்பர் ராமு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.