நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்தவர் அகிலரசன். இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கேத்தியா ஜெட் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும், அகிலரசனும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர் . இவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி தங்களுடைய 7 வருட காதலை இரு வீட்டாருக்கும் தெரிவித்த நிலையில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பஞ்சநதிகுளத்தில் அகிலரசன் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணாண கேத்தியா ஜேட் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தம்பதிகள் இருவரும் நாடு கடந்து காதல் செய்து திருமணம் செய்து கொண்டதை செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது கேத்தியா ஜேட், “இந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும் நாகை வாலிபர் பிலிப்பைன்ஸ் பெண்ணை திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.