தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்களின் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி.க்களுக்கான இருக்கைகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி முறிவு காரணமாக ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையொட்டி, நாடாளுமன்ற விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.