காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் சௌந்தர்யா (23) என்ற பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தன் தோழிகளுடன் அதே பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தப் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் என்ற வாலிபரை கடந்த 8 வருடங்களாக காதலித்த நிலையில் இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததோடு திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சௌந்தர்யா மற்றும் தினேஷ் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் கவனித்து வந்த நிலையில், சௌந்தர்யாவுக்கு திடீரென வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் அந்த நபருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் தினேஷுடன் பேசுவதை குறைத்து விட்டார். இது பற்றி தினேஷுக்கு தெரிய வந்த நிலையில் சௌந்தர்யாவிடம் கேட்டபோது அவரின் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சௌந்தர்யாவிடம் அந்த பழக்கத்தை கைவிடுமாறு தினேஷ் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் சௌந்தர்யாவின் அறைக்கு தினேஷ் என்றார். அங்கு சௌந்தர்யா தனியாக தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷ் அவரைக் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக போலீசுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தினேஷை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
