தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் வசிக்கும் 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சென்று கொண்டிருந்த போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.