இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் மக்களை பணய கைதிகளாக காசாவிற்கு சிறை பிடித்து சென்றனர்.

இந்நிலையில் கடத்திச் சென்ற மக்களை மீட்பதற்காக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. அதில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாளைக்கு 5 சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை வாங்குவதற்காக தினமும் அதிக அளவிலான கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கூறப்பிடுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் படையினர் நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோகம் செய்யும் இடத்தில் தாக்குதல் நடத்தினர். அதில் சம்பவ இடத்திலிருந்த 20 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.