இந்தியாவில் வசிக்கும் சோபியா என்ற ரஷ்யப் பெண், தனது கர்ப்பகால அனுபவங்கள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தோடு அவர் பழகும் விதம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டில் கர்ப்பமாக இருப்பது என்பது ஒரு அழகான அனுபவம் என்றாலும், கலாச்சார ரீதியாக அவர் சந்திக்கும் சில சவால்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

சோபியா குறிப்பிடும் 4 முக்கிய சவால்கள்:

1. ஓய்வு மற்றும் உடற்பயிற்சி: இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், “கர்ப்பம் என்பது நோய் அல்ல” என்று உறுதியாக நம்பும் சோபியா, தான் சுறுசுறுப்பாக இருக்கவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

2. உடை தேர்வு: கர்ப்ப காலத்தில் வளரும் வயிற்றை மறைக்காமல், தனக்குப் பிடித்தமான கிராப் டாப்களை அணிவதை அவர் விரும்புகிறார். ஆனால், இந்தியப் பொதுவெளியில் இதைப் பலரும் தவறாகப் பார்ப்பதும், ஏன் வயிற்றைக் காட்டுகிறீர்கள் என்று கேள்வி கேட்பதும் அவருக்கு அசௌகரியத்தைத் தருகிறது.

3. மொழித் தடை: மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைப் புரிந்துகொள்வதில் மொழி ஒரு பெரிய தடையாக உள்ளது. அறிக்கைகளைத் தானே மொழிபெயர்த்து, புரிந்துகொள்வது அவருக்கு மிகுந்த சோர்வைத் தருவதாகக் கூறியுள்ளார்.

4. இந்தியாவின் தட்பவெப்பநிலை: இந்தியாவிலுள்ள கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் அவரைப் பெரிதும் வாட்டுகிறது. காலை உணவைச் சமைப்பதற்கே அதிக வியர்வை ஏற்படுவதால், தினமும் பலமுறை குளிக்க வேண்டிய சூழல் நிலவுவதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களின் எதிர்வினை:

இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்திய நெட்டிசன்கள், “இந்தியாவின் உடல் அமைப்பு மற்றும் மரபணுக்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

அதனால்தான் இந்தியப் பெண்கள் அதிக ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்றும், “வயிற்றை மறைப்பது என்பது ‘கண் திருஷ்டி’ படக்கூடாது என்பதற்காகவே ஒழிய, அது ஒரு நோயாகக் கருதப்படுவதால் அல்ல,” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𝑫𝒆𝒔𝒊𝒍𝒊𝒇𝒆 |𝑩𝒆𝒂𝒖𝒕𝒚 |𝑰𝒏𝒅𝒊𝒂 (@sofia_desilife)

“>

அதேபோல், “நீங்கள் வெளிநாட்டவர் என்பதால் உங்களுக்குப் புதிதாகத் தெரியலாம், ஆனால் பில்லியன் கணக்கான மக்கள் இங்கு பிறந்து வளர்ந்துள்ளார்கள், இந்தியாவிற்கு இதில் அனுபவம் அதிகம்” என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியக் கலாச்சாரத்தை அணுகும் விதம், இந்தியாவிலுள்ள பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை குறித்த சுவாரஸ்யமான உரையாடலைத் தொடங்கியுள்ளது.