டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்திகா கன்னா என்பவர், தனது அண்டை வீட்டார் செய்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ளார். ஸ்விக்கியில் அவர் ஆர்டர் செய்த சுமார் 300 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், தவறுதலாக அதே பிளாட் எண்ணைக் கொண்ட மற்றொரு டவரில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பொருட்கள் தனக்குரியது அல்ல என்று தெரிந்தும், அண்டை வீட்டார் அதைத் திருப்பித் தராமல் தாங்களே எடுத்துக்கொண்ட விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

ரித்திகா ஆர்டர் செய்த பால், தயிர், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தவறுதலாக அருகில் உள்ள டவரில் டெலிவரி செய்யப்பட்டன. டெலிவரி பார்ட்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று பொருட்கலைக் கேட்டபோது, “இது உங்கள் தவறு, நாங்கள் இதைப் பயன்படுத்தப் போகிறோம்” என்று அந்த வீட்டின் பெண்மணி அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ரித்திகா, “இது வெறும் 300 ரூபாய் பற்றிய விஷயம் அல்ல, நேர்மை பற்றியது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் வசிக்கிறீர்கள், ஆனால் உங்களின் செயல் குடிசைப்பகுதி மக்களை விட மோசமாக உள்ளது.

டெலிவரி செய்பவர்களின் தவறுக்கு, அவர்களின் போனஸ் மற்றும் ரேட்டிங் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டாமா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இணையத்தின் கொந்தளிப்பு:

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்:

பணத்தை விட குணம் முக்கியம்: “வசதி என்பது வீட்டின் மதிப்பில் இல்லை, ஒருவரின் சிந்தனையில்தான் இருக்கிறது. இவர்கள் பணத்தால் பெரியவர்களாக இருந்தாலும், குணத்தால் ஏழைகள்,” என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

நேர்மை ஒரு விலையுயர்ந்த பண்பு: “நேர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு பண்பு, இதற்கு அடுக்குமாடி குடியிருப்புக்கும் குடிசைக்கும் சம்பந்தமில்லை,” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

டெலிவரி ஊழியர்களின் நிலை: “தவறு எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம், அதைத் திருத்திக் கொள்ளும் மனிதநேயம் தான் முக்கியம். இந்தச் செயலால் சம்பந்தமில்லாத டெலிவரி ஊழியர் தண்டிக்கப்படுவதுதான் மிகவும் கவலைக்குரியது,” என்று பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Khanna (@ritika_khanna_)

“>

மனிதநேயத்திற்கு விலை கிடையாது, பிறர் கடின உழைப்பை மதிப்பதே உண்மையான பண்பு” என்று ரித்திகா முடித்திருப்பது, இன்றைய சூழலில் சமூகத்தின் மனநிலை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.