இங்கிலாந்தை சேர்ந்த 20 வயது சார்லோட் சம்மர்ஸ் என்ற பெண்,  கர்ப்பம் ஏற்பட்டது என்பதை  குழந்தை பிறப்பதற்கு 17 மணி நேரத்திற்கு முன்பே தான் தெரிந்துகொண்டதாக கூறி, தனது அதிர்ச்சி அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி, பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், எடை உயர்வை மன அழுத்தம் என நினைத்தது காரணமாக, கர்ப்பம் என்பது கூடவே தெரியாமல் போனதாம்.

சம்மர்ஸ் கூறியதாவது, “நான் எட்டாம் அளவு ஆடைகளையே தொடர்ந்து அணிந்துக்கொண்டிருந்தேன். எடை கூடுதலையும், உடல்மாற்றத்தையும் மன அழுத்தத்தால் ஏற்பட்டது என நினைத்தேன். காதலனுடன் இரண்டரை வருடமாக உறவில் இருந்தேன். அது மகிழ்ச்சியான உறவுதான். அதனால் எதுவும் சந்தேகமாக தோன்றவில்லை,” என தெரிவித்துள்ளார்.

ஜூன் 6ம் தேதி மருத்துவரை சந்தித்த போது, “ஒரு பாதுகாப்புக்காக” கர்ப்ப பரிசோதனை செய்ய கூறப்பட்டது. அதில் கர்ப்பம் உறுதி ஆனதும், உடனே அல்ட்ராசவுண்ட் செய்ததில், அவர் ஏற்கனவே 38 வாரம் 4 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சார்லோட், உடனே மருத்துவமனைக்குத் சென்ற அடுத்த 17 மணி நேரத்திலேயே ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் “ரகசிய கர்ப்பம்” அல்லது “தெரியாத கர்ப்பம்” ” (Cryptic Pregnancy) எனப்படும் அரிய நிலைமையைச் சேர்ந்ததாகவும், இது கருப்பையின் அமைப்பு மற்றும் நஞ்சுக்கொடியின் நிலை காரணமாக ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாயாகிய சார்லோட், தன்னுடைய மன நிறைவையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். “எனக்கும், என் குழந்தைக்கும் ஏற்ற  புதிய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறோம்,” என கூறியுள்ளார்.