குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, ஒரு நபர் தனது மனைவியையும் 13 வயதுடைய சிறுமியையும்  வீட்டு உரிமையாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால், வீட்டு உரிமையாளர் அதை சாதகமாகப் பயன்படுத்தி அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்தச் சூழலில், கணவன் வாடகைக்கு பதிலாக தனது குடும்பத்தினரை பாலியல் ரீதியாக சுரண்ட அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரமான விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கணவர் ஆகிய இருவர் மீதும் போக்சோ – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.