ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் சாலையோரத்தில் செல்லும் போது, “முட்டை பர்கர் இருக்கா?” என்று கேட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
கடைக்காரர் உடனே “ஆம்” என சம்மதித்து வேலைக்கு இறங்குகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும், பயப்படவும் வைக்கும். எண்ணெய் இடவேண்டிய இடத்தில் அவர் நேரடியாக ஒரு எனர்ஜி பானை ஊற்றுகிறார். அதில் இரண்டு முட்டைகளை உடைத்து பொரிக்கிறார். வெங்காயம், வேர்க்கடலை, மேகி, சிப்ஸ் என அனைத்தையும் கலக்கி ‘முட்டை பர்கர்’ என வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.
இந்த உணவை சாப்பிட்ட அந்த வெளிநாட்டு நபர் “சூப்பரா இருக்கு” என்று பாராட்டுகிறார். இந்த வீடியோ jonathanmatas என்ற இன்ஸ்டா ஐடியால் பகிரப்பட்டுள்ளது. “முட்டை நகரத்தில் இருக்கும்போது, முட்டை பர்கரை முயற்சிக்கவும்” என்ற வாசகத்துடன் வெளியான இந்த காணொளி 4 மில்லியனுக்கும் அதிக பார்வைகள் மற்றும் 91 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் கலவையான எதிர்வினைகளை அளித்துள்ளனர். சிலர், “கடைக்காரர் பார்ப்பதெல்லாம் பர்கரில் போட்றார் போல”, “இது உணவா இல்ல வேற ஏதாவதா?” என நக்கலாகவும், “இந்திய உணவைச் சிதைக்க கூடாது” என கோபத்துடனும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது உணவா? கலைமனோபாவமா? அல்லது சுத்தமான சமூக ஊடக பப்ளிசிட்டியா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். ஆனாலும், இது போன்ற விஷயங்கள் இணையத்தில் தன்னிச்சையாக வைரலாகும் இந்த காலத்தில், உணவின் நம்பிக்கையும் சுவைக்கும் எதிலும் எல்லை என்பது இல்லாமல் விட்டுவைக்கப்படும் என்பது தான் உண்மை. அதன் சாட்சியாக இக்காணொளி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
