ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் கொடூரமான குடும்ப வன்முறை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுராதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிடென்டாக பணிபுரிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் அவரது இரண்டு வயது மகள், கணவனின் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதிலும் சற்று நேரத்திலேயே, மொட்டை மாடியில் நின்ற ஒரு பெண் (மாமியார் என சந்தேகிக்கப்படுகிறது), அவ்விருவரின் மீது கற்களை எறிந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் அந்த பெண் “பச்சாவ்… பச்சாவ்” (என்னை காப்பாற்றுங்கள்) என அலறுவதை பார்க்க முடிகிறது. தனது குழந்தையுடன் கதவின் அருகே உதவி கேட்டு நிற்கும் அந்த பெண், சுதந்திரமாக வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் கதவின் பூட்டை சுத்தியலால் அடித்து திறக்க முயற்சிக்கிறார். பின்னர் சோர்வடைந்து தரையில் படுத்துக் கிடக்கும் அவளின் காட்சி, அருகில் நின்ற சிறுவயது மகளின் குழப்பமும், அந்த தருணத்தின் பயத்தை உணர்த்துகிறது.
शर्मनाक घटनाक्रम
पाली जिले के रोहट में महिला को घर से बाहर निकालकर उस पर पत्थर फेंकने का वीडियो हो रहा वायरल l महिला का पति मथुरादास माथुर अस्पताल में जूनियर रेजिडेंट पद पर है कार्यरत l
महिला व उसकी 2 वर्ष की बेटी को ससुराल पक्ष ने निकाला बाहर @RajCMO@GajendraKhimsar #Pali pic.twitter.com/Axpr7N08CB— Dixit Parihar (@dixitparihar) August 14, 2025
“>
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கணவனின் இல்லத்தில் இடம் பெற்ற இந்தக் கொடூரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார் என தகவல். அத்துடன், அந்த வீட்டில் இருந்தவர்களுடன் அவருக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஆனால் இது போன்ற அகாரியமான தாக்குதல் நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
